வாஸ்து - வீடு

வாஸ்து - வீடு

ஆண்டாள் வாஸ்துவின் விதியானது வீடு, கடை, தொழிற்சாலை அனைத்திற்கும் பொதுவானது. இருப்பினும் வீட்டைக்கட்டும்போது தெரு எந்தப் பக்கம் இருப்பினும் ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டியது.

  1. கட்டப்படும் வீட்டின் எந்த மூலையும் உடையக்கூடாது.
  2. வீட்டின் எந்த மூலையும் நீட்சி அடையக்கூடாது.
  3. வீட்டிற்கு என தனி மதிற்சுவர் கட்டாயம் இருக்க வேண்டும்.
  4. மதிற்சுவரும் சதுரிக்கப்பட்ட அமைப்பில் இருக்க வேண்டும்.
  5. வீட்டிற்கும், மதிற்சுவருக்கும் போதிய இடைவெளி இருக்கவேண்டும்.
  6. வீட்டிற்கும், மதிற்சுவருக்கும் பொது சுவர் கூடாது.
  7. வீட்டின் தரைதளம் சமமாக இருக்கவேண்டும்.

குறள்:

எப்பொருள் எத்தன்மைய தாயினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு.

விளக்கம்:

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

அதுபோல, ஒரு விஷயத்தை படித்தோ, கேள்விப்பட்டோ முழுமையாக செய்ய இயலாது.

எவ்வாறு ஒரு கருத்தை தெளிவுபடுத்த குரு அவசியமோ, அதைப்போல வீடு/கடை/தொழிற்சாலையை ஒரு ஆண்டாள் வாஸ்து நிபுணரின் உதவியோடு அமைத்து வாழ்வில் வெற்றி காண்பீர்.